வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் இயற்ற கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஆளுநர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது என்றும், அதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது என்றும் கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் சிறப்பு சட்டசபைக் கூட்டுவதற்கு அவசரம் காட்ட முடியாது என்றும், ஆளுநர் அவகாசம் கோரியதாகவும் கூறப்படுகிறது. எனவே இன்று நடப்பதாக இருந்த கேரள சட்டசபையின் கூட்டம் நடைபெறாது எனத் தகவல் வெளியாகி உள்ளது.