திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்கு அனுமதிக்காததை கண்டித்து, வெளியூர் பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் 25ம் தேதி முதல் 10 நாள்கள் திறக்கப்படவுள்ளது.
இதற்காக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், திருப்பதி பகுதி மக்களுக்கு மட்டும் 24ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டை வெளியூர் பக்தர்கள் பெறுவதை தடுக்க, உள்ளூர் மக்களுக்கு இன்று முதல் 3 நாள்களுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்றே அளிக்கப்பட்டுள்ளன. இதையறியாமல் வந்த வெளியூர் பக்தர்கள், ஏமாற்றத்துடன் கருடாழ்வார் சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.