பிரிட்டனில் வீரியம் மிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவுவது குறித்து இந்திய அரசு விழிப்புடன் இருப்பதாகவும், எனவே மக்கள் அது குறித்து பீதி அடைய தேவையில்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.
டெல்லியில் நடக்கும் இந்திய அறிவியல் விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஓராண்டாக மக்களின் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது என்றார்.
கற்பனையான வதந்திகளுக்கு மக்கள் பலியாக கூடாது என அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே, பிரிட்டனை தவிர இத்தாலியிலும் நபர் ஒருவருக்கு வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.