புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசும் விவசாயிகளும் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தியும் இருபிரிவினரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் இன்று 26ஆவது நாளாக நீடிக்கிறது.
டெல்லி அருகே சிங்கு என்னுமிடத்தில் ஒவ்வொரு நாளும் 11 பேர் என மாறி மாறி உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்க உள்ளனர்.
இந்நிலையில் 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்தினருக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.