இமயமலையில் உள்ள பனிப்பாறைகளின் ஆழத்தையும், அவற்றில் கிடைக்கும் தண்ணீர் அளவையும் அளவிடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய தேசிய துருவம் மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ரவிச்சந்திரன், இமயமலையில் உள்ள சந்திரா நதிப்படுகையில் இருக்கும் 7 பனிப்பாறைகளை முதலில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இதற்காக மைக்ரோவேவ் சிக்னல்களை கொண்ட ரேடார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போகிறோம் என்று கூறிய அவர், இந்த சிக்னல்கள் பனிப்பாறையில் பிரதிபலிக்கிறபோது, அதன் ஆழத்தை புரிந்துகொள்ள முடியும் என்றார்.