உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டும் செயல்படுவதாக மருத்துவக் குழு தகவல் அளித்துள்ளது.
கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவர் உடல்நலக் குறைவு காரணமாக பல மாதங்களாக ராஞ்சியின் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், லாலுவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.