சீக்கியர்களின் ஒன்பதாம் குரு தேஜ்பகதூரின் நினைவுநாளையொட்டி டெல்லியில் உள்ள குருத்துவாராவுக்குச் சென்ற பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
சீக்கியர்களின் ஒன்பதாம் குரு தேஜ்பகதூர், மொகலாய மன்னர் அவுரங்கசீப்பின் மேலாதிக்கத்தை ஏற்க மறுத்ததால் அவரது உத்தரவின்படி தலை துண்டித்துக் கொல்லப்பட்டார்.
அவர் உயிர்த்தியாகம் செய்த நாள், சீக்கியர்களால் சாகீதி திவாஸ் என்னும் பெயரில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராகாப் கஞ்ச் சாகிப் குருத்துவாராவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குத் தலைதாழ்த்தி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள மோடி, குரு தேஜ்பகதூரின் வாழ்க்கை துணிச்சலுக்கும், இரக்கத்துக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.