ஓடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடிகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
சுமார் 40ஏக்கர் பரப்பளவில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் வனத்துறை அடங்கிய 300க்கும் மேற்பட்ட குழுவினர் விரைந்து சென்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது சுமார் 2கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பயிர் தீ வைத்து அழிக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆபிரகாம் பெஹேரா தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கஞ்சா பயிரிட்டோரை தேடி வருவதாகவும் அவர் கூறினார்.