இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை சீனா ஒப்புக் கொண்டுள்ளது.
சீனாவில் இருந்து வெளியாகும் குளோபல் டைம்ஸ் பத்திரிகை எழுதியுள்ள கட்டுரையில், இந்தியப் பெருங்கடலில் சிறிய அளவிலான பலதரப்பு ஒத்துழைப்பு வழிமுறைகளைத் திட்டமிடுவதில் இந்தியாவும் முன்னிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டு வீரர்கள் இந்தியாவுடன் இணைந்து போர் பயிற்சி மேற்கொண்டதையும், வியட்நாமில் இருந்து தென் ஆப்பிரிக்கா வரை 11 நாடுகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டதையும் குளோபல் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது.
இதனால் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் வலிமை மற்றும் தலைமைத்துவம் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.