புதிய வேளாண் சட்டங்கள் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும், உழவர் பெருங்குடி மக்களுக்கு, அவரவர் தாய்மொழிகளில் கடிதம் எழுதியுள்ள மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், தவறாக பரப்பப்படும் தகவல்களுக்கு உரிய விளக்கங்களை அளித்துள்ளார்.
அதில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை, இப்போதும், எப்போதும் தொடரும் என உறுதியளித்துள்ளார். வேளாண் ஒழுங்குமுறை விற்பனை நடைமுறை தொடரும் என்றும், அவற்றை விரிவுப்படுத்தி மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை, உடன்பாடு மேற்கொண்டு, வாங்குவதற்கு மட்டுமே, ஒப்பந்ததாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், விவசாயிகளின் நிலத்தை நேரடியாக, குத்தகை மூலமாக பெறவோ அனுமதி கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.