விமான போக்குவரத்து தொடர்பான ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தத்தை மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், சொந்த நாடுகளுக்கு திரும்ப விரும்புவோர் மற்றும் அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்பவர்களுக்காக வந்தே பாரத் மிஷன் மற்றும் ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தம் ஆகிய இரு வழிகளில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இப்போது ஏர் பப்பிள்ஸ் ஒப்பந்தத்தை 23 நாடுகளுடன் மத்திய அரசு செய்துள்ளது. இதனால் ஐரோப்பா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலிருந்து தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு பயணிக்க இப்போது மத்திய அரசு அனுமதித்துள்ளது.