டெல்லி அருகே நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் வாகன உற்பத்தியை நிறுத்திக்கொள்ள ஹோண்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் நொய்டாவில் 1997ஆம் ஆண்டு தனது வாகன உற்பத்தி ஆலையை அமைத்தது. ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் திறனுள்ள இந்த ஆலையில் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
அதேநேரத்தில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், உதிரிப் பாகங்கள் பிரிவு, ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவு ஆகியன நொய்டாவில் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் தபுகாரா என்னுமிடத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் கார்கள் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை ஹோண்டா நிறுவியுள்ளது குறிப்பிடத் தக்கது.