அடுத்த ஓர் ஆண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்வதற்கு, அரசுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன்கள அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் இதர நோய்கள் உள்ள-50 வயதுக்கு மேறபட்ட நபர்கள் 27 கோடி பேர் என 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என கூறப்படுகிறது.
இதற்காக கோவாக்சின் மற்றும் சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு விரைவில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அவசரகால அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.