கொரோனா தடுப்பூசி விருப்பமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க உள்ளது. முதல் கட்ட முன்னுரிமை பட்டியலில் வைரஸ் தொற்றுக்கான ஆபத்து நிறைந்தவர்கள் உள்ளனர்.
மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் அதில் அடக்கம். இரண்டாம் குழுவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குடல் மற்றும் சிறுநீரக நோய் உள்ள 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க உள்ளனர்.
கொரோனா தொற்று அல்லது அதன் அறிகுறி இருப்பவர்களுக்கு தடுப்பூசி அறிவுறுத்தப்படவில்லை. அவர்கள் தடுப்பூசி போட வந்தால் அவர்கள் மூலம் பிறருக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பதால் நோயில் இருந்து குணமடைந்து 14 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.