சுமார் 7926 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்பி ராயபதி சாம்பசிவ ராவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த அவரது டிரான்ஸ்ஸ்டிராய் இந்தியா நிறுவனம், போலாவரம் அணை கட்டுமான திட்டத்திற்காக கனரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.
இது தொடர்பாக ஹைதராபாத், குண்டூரில் சிபிஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளது. வைர வணிகர் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில், அதற்குப் பின் நடந்த மிகப்பெரிய வங்கி மோசடியாக இது கருதப்படுகிறது.
அதே போன்று சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று 310 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த புகாரிலும், சிபிஐ சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளது.