இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் பல்ராம் பார்கவா, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதய நிபுணரான அவருக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் தொற்று உறுதியான நிலையில், வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே போன்று உத்ரகண்ட் மாநில முதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னைத் தானே, சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.