ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4 புள்ளி 2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக அருகில் இருந்த டெல்லியில் கட்டடங்கள் குலுங்கின.
தொடர்ச்சியாக பல விநாடிகளுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக டெல்லி வாசிகள் தெரிவித்தனர். பலர் பயந்து வீட்டை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஆயினும் நிலநடுக்கத்தால் சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை