ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கு வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், தொழில்களை எளிதாக செய்வதற்கான சீர்திருத்தம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பயன்பாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் மின்சாரத்துறை சீர்திருத்தங்களை முழுமையாக செயல்படுத்த வருகிற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அதற்குள் வெற்றிகரமாக செயல்படுத்தினால் ஒவ்வொரு சீர்திருத்தத்துக்கும் மொத்த மாநில உற்பத்தியில் 0.25 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடன் அனுமதிக்கப்படும் என்றும், 4 சீர்திருத்தங்களையும் நிறைவு செய்தால் 2.14 லட்சம் கோடி வரை கூடுதல் கடன் பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.