மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அதன் நகல்களை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.
விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக ஆலோசிக்க கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த சட்டங்களை நாடாளுன்றத்தில் அவசரமாக நிறைவேற்றியதன் அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் முதன் முறையாக வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்றியதாக குற்றம்சாட்டினார். ஆங்கிலேயர்களை விட மோசமானதாக மத்திய அரசு மாறக் கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.