தேங்காய்திட்டு துறைமுகம் அருகே கடலில் மிதந்த 9 அடி நீளமுள்ள குட்டி விமானம் போன்ற அமைப்பை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள இதில் "பான்ஷீ டார்கெட் - 7146" (banshee) என எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து கடலோர காவல்படை போலீஸ் எஸ்பி பாலசந்தர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மேலும் கடலோர காவல் படையினர் அதன் பயன்பாடு குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.