போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ரஜௌரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷாரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.