டெல்லி வந்துள்ள பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டாம்னிக் ராப் பிரதமர் மோடி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்தார்.
ஜெய்சங்கருடன் அவர் விவசாயிகள் போராட்டம், இந்தோ பசிபிக் கூட்டுறவு, கொரோனா தடுப்பூசி விநியோகம், மல்லயாவை இந்தியா அழைத்து வருவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் அமைதியான போராட்டங்களுக்கு பாரம்பரியமான மரபு இருப்பதாக குறிப்பிட்டார். நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டனில் விவசாயிகள் பிரச்சினைக்கு எம்பிக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் இப்பிரச்சினையில் தலையிட வேண்டாம் என்று இந்தியா வலியுறுத்தியிருந்தது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தியா வர உள்ள நிலையில் விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.