பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்களால் எல்லைப் பகுதியில் மிகுந்த விழிப்புணர்வுடன் ஒருநாள் கூட விடாமல் தினம்தோறும் இரவும் பகலும் வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருப்பதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் சிரமமும் சவாலும் மிக்க இப்பணியை இந்திய ராணுவ வீரர்கள் செம்மையாக கையாண்டு வருவதாகவும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களைக் குறி வைத்து அப்பாவி மக்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடுத்து வருவதால் இந்திய வீரர்களும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்