காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் அந்நாட்டு வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி, காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுகிறது. எல்லையில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளை குறிவைத்து சிறிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில், நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.இதையடுத்து இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், பாகிஸ்தான் தரப்பில் 2 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.