15 முதல் 20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்க கூடிய ரேபிட் ஆன்டிஜன் சோதனை கிட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக பெரிய மருந்து நிறுவனமான சிப்லா தெரிவித்துள்ளது.
இந்த கிட்டை இந்த வாரமே விற்பனைக்கு விட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டின் வாயிலாக தொண்டைப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் ஸ்வாப் திரவம் சோதனை செய்யப்படும். ஐசிஎம்ஆரின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு மட்டுமே இந்த சோதனையை நடத்த அனுமதி வழங்கப்படும்.
இந்த கிட்டுக்கு CIPtest என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே Elifast என்ற பெயரில் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடீசுகளை கண்டறியும் கிட்டை சிப்லா அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.