இமயமலையின் பனிப் பாலைவனப் பகுதியில் முதன் முறையாக ஹிமாலயன் சீரோ என்ற விலங்கு தென்பட்டது.
ஆடு, கழுதை, பசு மற்றும் பன்றி போன்ற விலங்குகளின் கலப்பினமாகக் கருதப்படும் ஹிமாலயன் சீரோக்களை இமயமலையில், 2 ஆயிரம் மீட்டர் முதல் 4 ஆயிரம் மீட்டர் வரையிலான உயரத்தில் காணமுடியும் என கூறப்படுகிறது.
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி, ஹர்லிங் கிராமத்தில் அமைந்திருக்கும் ஆற்றங்கரையோரம் இந்த விலங்கினை உள்ளூர்வாசிகள் மற்றும் வனத்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் முதன்முறையாக பார்த்துள்ளனர்.