கோவிட் 19க்கான தடுப்பு மருந்துகளை வைக்க 41 ஆயிரம் குளிர்பதன சாதனங்கள், 45 ஆயிரம் ஐஸ் மூலம் பதப்படுத்தும் குளிர்பதனப் பெட்டிகள், உள்ளிட்ட சாதனங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
மருந்தை குளிர் பதனிடச் செய்வதற்கான வழிகாட்டல்கள் அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தடுப்பூசி மருந்துகளை குளிர்ச்சியான இடத்தில் வைத்து பாதுகாத்து பயன்படுத்துவதற்கான முறைகளை மாநில அரசுகளுடன் மத்திய அரசு பகிர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.