பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
வேளாண்சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.
காணொலி வாயிலாக நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டம், காலை 11.25 மணிக்கு தொடங்குகிறது. இதில், வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், கொரோனா தடுப்பூசி வினியோகம், 4ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாகவும், கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.