வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 20-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், நாளை காலை 11.25 மணிக்கு காணொலி காட்சி மூலம் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்தும் வேளாண்சட்டங்கள் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.