மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரே அங்கு மத்திய படைகளை அனுப்புமாறு தேர்தல் ஆணையத்திடம் மாநில பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில்,காஷ்மீரை விடவும் மேற்கு வங்கத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை உடனே அமல்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறையின் முழு ஆதரவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளதால், தங்களால் அங்கு தேர்தல் பிரச்சாரத்தை நடத்துவது சிரமம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே மேற்கு வங்க நிலைமை குறித்து ஆராய துணை தேர்தல் ஆணையாளர் சுதிப் ஜெயின் விரைவில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.