ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவையை தொடங்க வாட்ஸ்-அப் செயலிக்கு, எவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டது என பதிலளிக்க, தேசிய பணப்பட்டுவாடா கழகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 40 கோடி பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ்-அப் செயலி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
செயலிகள் மூலமான பணப்பரிவர்த்தனையால், பயனாளர்களின் தரவுகளுக்கு ஆபத்து உள்ளதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், யுபிஐ எனப்படும் மூன்றாம் தரப்பு பணப்பரிவர்த்தனைக்கு ஒப்புதல் வழங்கியது, தேசிய பணப்பட்டுவாடா கழகம் தான் என ரிசர்வ் வங்கி பதில் மனு தாக்கல் செய்துள்ளது.