டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வீட்டுக்குள் நுழைய முயன்ற பாஜகவினர் வாசலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தனர்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முதலமைச்சர் கெஜ்ரிவாலைக் கண்டித்து அவரது வீட்டு முன் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று வீட்டு வளாகத்தில் புகுந்த அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தனர். இந்த வீடியோவை ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.