கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்திற்காக, இந்திய விமான நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி சேமிப்பு மற்றும் அவற்றை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு விமானம் மற்றும் விமான நிலையங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட உள்ளன.
டெல்லி, மும்பை மற்றும் ஐதாராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள, தனியார் விமான நிலையங்கள் தடுப்பூசி விநியோக மையங்களாக செயல்படும் எனக் கூறப்படுகிறது.