வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் பகுதிகளில் விவசாய சங்க தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் டெல்லியிலும், டெல்லி எல்லைப்புற சாலைகளிலும் மேற்கொண்டுள்ள போராட்டம் 19-வது நாளாக நீடிக்கிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று டெல்லியிலும், போராட்டம் நடைபெறும் எல்லைப்புற சாலைகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியின் சிங்கு எல்லை, திக்ரி எல்லை, உத்தரபிரதேச எல்லையில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாய சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.