கிழக்கு லடாக்கில் நமது வீரர்கள் உச்சபட்ச தீரத்துடன் போராடி சீன படையினரை விரட்டினர் என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகசூழல் எவ்வாறு மாறுகிறது, ஒப்பந்தங்கள் எப்படி மீறப்படுகின்றன என்பதை லடாக்கில் சீனாவின் அத்துமீறல் நினைவுபடுத்தியதாக குறிப்பிட்டார்.
லடாக்கில் சீனாவை விரட்டிய இந்திய வீரர்களின் சாதனை குறித்து வருங்கால தலைமுறை பெருமை கொள்ளும் என்றார் அவர்.