வேளாண் சட்டங்களில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே அந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஃபிக்கி எனப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் அவர் பேசினார். போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை கவனத்துடன் கேட்டு,வேளாண் சட்டங்கள் குறித்த தவறான எண்ணங்களை அகற்ற மத்திய அரசு தயாராக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு திறந்த மனதுடன் விவாதிக்கவும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளது எனவும் அவர் உறுதி அளித்தார்.