வடமாநிலங்களில் கடும் குளிர் நீடித்து வருகிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பனி மூட்டம் காரணமாக காலையில் ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவர்கள்.
சைக்கிள் ஓட்டுபவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இருந்த போதும் அதிகாலை குளிர்ச்சியை அனுபவிக்க விரும்புவதாக கூறிய பலர் அங்கு திரண்டுள்ளனர்.
சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக காவல்துறையினர் அப்பகுதியில் போக்குவரத்தை 2 மணி நேரத்துக்கு ஒருவழிப்பாதையாக மாற்றியுள்ளனர்.
இதனிடையே டெல்லியிலும் இன்று அதிகாலை வழக்கம் போல கடும் குளிரும் பனிமூட்டமும் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்