கர்நாடக பேருந்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நான்காவது நாளாக நீடிக்கிறது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று நடத்திய பேச்சு வார்த்தையில், துணை முதலமைச்சர் லட்சுமண் சாவடி உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாகக் கருத வேண்டும் என்ற கோரிக்கையைத் தவிர ஊதிய உயர்வு உள்ளிட்ட இதர கோரிக்கைகளை ஏற்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் முடிவை ஏற்காத போக்குவரத்து ஊழியர்கள் இன்று 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பெங்களூரின் மெஜஸ்டிக் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.