பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அவரே தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதை தொடர்ந்து சோதனை செய்து கொண்டதாகவும் அதில் தொற்று உறுதியானதாகவும் நட்டா குறிப்பிட்டுள்ளார்.
தாம் நலமுடன் இருப்பதாக கூறியுள்ள அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டுத் தனிமையில் இருப்பதாக கூறியுள்ளார்.
தம்முடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறும் நட்டா கேட்டுக் கொண்டுள்ளார்.