ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளது.
அவருடயை சிறுநீரகம் எப்போது வேண்டுமானாலும் செயலிழந்துவிடும் என்று தெரிவித்துள்ள லாலுவின் மருத்துவர் உமேஷ் பிரசாத் இதனை எழுத்துப் பூர்வமாக அதிகாரிகளுக்குத் தெரிவித்திருப்பதாக கூறினார்.
தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் லாலுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.