மகாராஷ்டிரா மாநிலத்தில், அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து பணிக்கு வரக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அடர் வண்ணத்தில் ஆடைகள், டிசைனில் உள்ள ஆடைகள் அணிந்து அலுவலகத்திற்கு அணிந்து வரக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
ஆண் ஊழியர்கள், பேன்ட், சட்டை மட்டுமே அணிய வேண்டும் என்றும், பெண் ஊழியர்கள், சுடிதார், புடவை மற்றும் சல்வார் அணிந்து வரலாம் என்றும், ஊழியர்கள் காலணிகள், ஷு அணியலாம் எனவும், சாதாரண ரப்பர் காலணிகளை அணியக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாரம் ஒரு முறை கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.