செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இந்தியாவின் முதல் சூரிய ஒளி மினியேச்சர் ரயில்… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!!

Dec 13, 2020 01:06:03 PM

திருவனந்தபுரத்தின் அருகேயுள்ள சுற்றுலா தளமான வெளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மினியேச்சர் ரயில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

கடவுளின் தேசமான கேரளா இந்தியாவில் சுற்றுலா தளங்கள் நிறைந்த மாநிலங்களுள் ஒன்றாகும். அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள வெளி கிராமம் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரக்கூடியது. சுற்றுலா துறைக்கு மொத்தம் 120 கோடி ரூபாய் ஒதுக்கிய அம்மாநில அரசு சுமார் 60 கோடி ரூபாய் வெளி கிராமத்திற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது.

வெளி கிராமத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர கேரள அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளி கிராமத்தில் இந்தியாவின் முதல் சூரிய ஒளியில் இயங்கும் மினியேச்சர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். மேலும் ஏழரை கோடியில் இங்கு கட்டப்பட்டுள்ள நகர்புறப் பூங்கா மற்றும் நீச்சல்குளம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.

இரண்டரை கிலோ மீட்டர் வரை ஓடும் இந்த சூரிய ஒளி ரயில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்துள்ளது. மூன்று பெட்டிகளுடன் ஓடும் இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 45 பேர் பயணிக்க முடியும். செயற்கை நீராவி என்ஜின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு புதிய அனுபவத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. சுமார் 10 கோடி ரூபாய் செலவில் சுற்றுசூழல் பாதிக்காத வகையில் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி ரயில் மூலம் அரபி கடலோரம் அமைந்துள்ள வெளி கிராமத்தின் இயற்கை அழகை முழுமையாக ரசிக்க முடியும். 

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ”இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் சுற்றுலாத் தளமான வெளி கிராமத்தில் தற்போது  வெறும் 40 சதவிகித பணிகளே முடிந்துள்ளன. மேலும் இங்கு திறந்த வெளி திரையரங்கம், கேரளா மாநிலத்தின் கலாச்சாரத்தை விவரிக்க கூடிய வகையில் கலைக்கூடம் ஆகியவையும் அமையப்பட இருக்கின்றன. மீதமுள்ள பணிகளும் முடிவடையும்போது கேரளாவில் வெளி கிராமம் ஒரு முக்கியமான சுற்றுலா தளமாக அழகுடன் காட்சியளிக்கும்” என்று கூறியுள்ளார். 

 


Advertisement
ஆந்திராவில் சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பவர் டம்மி உள்துறை அமைச்சர் - ஒய்.எஸ்.ஆர் கட்சி விமர்சனம்..!
உ.பி. அரசு கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் - உச்சநீதிமன்றம்
ஜார்கண்ட் மாநில அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டது - பிரதமர் மோடி
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்து - 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..
ரயில் தண்டவாளத்தில் மாணவி தவறி விழுந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி
காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ள நிலையில், இந்தியா - கனடா இடையே வார்த்தை மோதல் அதிகரிப்பு
தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முவுர் கொலை..
காரைக்கால் அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை .!
புதுச்சேரி விடுதலைதினத்தையொடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி
நாடு முழுவதும் ஒளிவீசும் மின்விளக்குகளால் சிறப்படைந்த தீபாவளி பண்டிகை

Advertisement
Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!


Advertisement