4 கோடி முக கவசங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா காலத்திலும் நாட்டின் ஜவுளித்துறை ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது என்றார்.
மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 15 கோடி முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதே போன்று 6 கோடி தனிநபர் பாதுகாப்பு உடைகள் தயாரிக்கப்பட்டதாகவும், இதில் இரண்டு கோடி உடைகளும், 4 கோடி முகக் கவசங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.