கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை புதுவித அபூர்வ பூஞ்சை தொற்று தாக்குவதாக அகமதாபாத் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்ற இந்த தொற்று வந்தால் இறப்பதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் வரை உள்ளதாக கூறப்படுகிறது.
உயர்ந்த சர்க்கரை அளவு மற்றும் அதிகமாக ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூக்கு துவாரங்கள், சைனஸ் பகுதி, கண், நுரையீரல் மற்றும் தாடைப்பகுதிகளை இந்த பூஞ்சை தாக்குவதாக இது வரை இந்த தொற்றுக்கு ஆளான 4 நோயாளிகளை ஆராய்ந்ததில் தெரிய வந்துள்ளது.