அடுத்த 6 முதல் 8 மாதங்களில் 60 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் பணியில் தேர்தல் நடத்தும் போது பயன்படும் கட்டமைப்புகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி விநியோகம் குறித்து நிதி ஆயோக் பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்குகிறது. அதன் மருத்துவ நிபுணர் குழுவின் தலைவராக இருக்கும் வி.கே. பால், இதற்காக 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை உள்ள குளிர்பதன கிடங்கு வசதிகளை அரசு உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் டெல்லி முதல் தொலைதூரத்தில் உள்ள கிராமம் வரை அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
அதே பாணியில் தடுப்பூசி விநியோகத்திற்கும் தேர்தலின் போது பயன்படுத்தும் கட்டமைப்புகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.