இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையேயான உச்சி மாநாட்டில், 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
காணொலி வாயிலாக நேற்று நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் அதிபர் சவ்கத் மிர்சியோயேவ் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மோடி, இருநாடுகளும் தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்ற ஒரே மாதிரியான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது என்றார்.
தீவிரவாதத்தை அழிப்பதற்கு இருநாடுகளின் கூட்டு முயற்சி தொடர்ந்து தேவைப்படுகிறது எனவும் பிரதமர் கூறினார். தொடர்ந்து, ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.