கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 6 மாதங்களாக நிகழும் மோதல்களுக்கு, சீனாவின் செயல்பாடுகளே காரணம் என இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளார் அனுராக் ஸ்ரீவஸ்தவா, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியருகே, சீனா தனது எல்லையை ஒரு தலைபட்சமாக மாற்ற முயன்றதாக குற்றம்சாட்டினார்.
இதன் மூலம், இருநாட்டு எல்லைப் பகுதியில் அமைதியையும், சுமுகமான சூழலையும் உறுதிசெய்ய வேண்டும் என்ற ஒப்பந்தங்களை, சீனா மீறியதாகவும் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.