சூடான் நாட்டுக்குப் போய் திரும்பி வந்த கேரளத்தைச் சேர்ந்த ராணுவவீரர் ஒருவருக்கு உடலில் அரிய வகை மலேரியா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெண் கொசுக் கடியால் உருவாகும் மலேரியா நோயில் இதுவரை கேரளாவில் இல்லாத புதிய வகை தொற்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த வீரர், சூடானுக்கு அனுப்பப்பட்ட அமைதிப் படையில் இடம்பெற்றவர். கடந்த ஜனவரி மாதம் சூடானில் இருந்து திரும்பிய அவர் கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தபோது, கடும் காய்ச்சல் உருவானது.
இந்த வகை மலேரியா தொற்று உடலுக்குள் நீண்ட காலமாக இருக்கக்கூடியது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.