கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்களுக்கான கட்டணங்களில், 75 சதவிகிதம் பயனாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டு உள்ளதாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், கட்டணத்தொகையில், மூவாயிரத்து 200 கோடி ரூபாய் திருப்பி செலுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 219 கோடி ரூபாய் வாடிக்கையாளர்களின் கணக்கில் எதிர்கால பயன்பாட்டிற்காக, வைப்புத் தொகையாக சேர்க்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, இண்டிகோ நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயை, பயனாளர்களுக்கு திருப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.