இந்தியா போன்ற வளரும் உறுப்பு நாடுகளின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்காக வழங்க, ஆசிய வளர்ச்சி வங்கி 66 ஆயிரத்து 392 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
"ஆசிய பசிபிக் தடுப்பூசி பெறும் வசதி" எனும் இத்திட்டத்தின் மூலம், வளரும் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பூசி கொள்முதல் உடன், செயல்முறையை பாதுகாப்பாகவும், சமமாகவும், திறமையுடனும் நிர்வகிப்பதற்கான திட்டங்களுக்கு உதவ, நிதி ஒதுக்கப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.